தாலுக்கா அலுவலக சுவர்களில் வளரும் மரங்களால் சேதமாகி வரும் சுவர்கள்!

குமாரபாளையம் தாலுக்கா அலுவலக சுவர்களில் வளரும் மரங்களால் சுவர்கள் சேதமாகி வருகிறது.;

Update: 2023-11-22 15:00 GMT

படவிளக்கம் : குமாரபாளையம் தாலுக்கா அலுவலக சுவர்களில் விளையும் மரங்களால் சுவர்கள் சேதமாகி வருகிறது

தாலுக்கா அலுவலக சுவர்களில் விளையும் மரங்களால் சேதமாகி வரும் சுவர்கள்

குமாரபாளையம் தாலுக்கா அலுவலக சுவர்களில் விளையும் மரங்களால் சுவர்கள் சேதமாகி வருகிறது.

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் தற்காலிகமாக நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. தாலுக்கா அளவிலான பகுதிகளிலிருந்து பெரும்பாலான பொதுமக்கள் பல்வேறு பணிகள் காரணமாக இங்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலக பக்கவாட்டு நுழைவுப்பகுதியில் உள்ள சுவற்றில் அரசமரம் ஒன்று பூமியில் இருந்து சுவற்றை குடைந்து கொண்டு சுவற்றின் உயரத்திற்கு மேலாக வளர்த்துள்ளது. இது நாளாக, நாளாக பெரிதா வளரும் போது, இந்த சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தின் நுழைவுப்பகுதி காண்போரை முகம் சுளிக்கும் விதமாக உள்ளது. எனவே இந்த மரத்தை அகற்றி சுவர் விழாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News