அனைவரும் தடுப்பூசி போடுங்க :குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

குமாரபாளையம் பகுதியில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.;

Update: 2022-01-02 05:12 GMT

குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் சசிகலா.

தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் சசிகலா கூறியிருப்பதாவது :-

குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் இன்று 20 இடங்களில் (சத்துணவு மையம்,பள்ளிகள்) கொரோனா தடுப்பூசி இலவமாக போடப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடாத (முதல் மற்றும் இரண்டாவது தவணை) நபர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய நகராட்சியாக உருவாக்கிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News