ஆபத்தை உணராமல் புறவழிச் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்
குமாரபாளையம் அருகே ஆபத்தை உணராமல் புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.;
சேலம் கோவை புறவழிச்சாலை, வட்டமலை அருகே தட்டான்குட்டை பிரிவு பகுதியில் உள்ள டிவைடரில் உடைப்பு ஏற்படுத்தி டூவீலர் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தான பயணம் என்று அறிந்தும் இது இன்று வரை தொடர்ந்து கொண்டே உள்ளது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது போன்ற டிவைடர் சேதங்களை சரி செய்திட பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. இந்த டிவைடர் உடைப்பால் பல உயிர்கள் போனால் மட்டுமே இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அசம்பாவிதம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகி, பல குடும்பங்கள் அனாதையான பின் சரி செய்வதை காட்டிலும், இப்போதே இந்த டிவைடர் சேதத்தை சரி செய்து பல உயிர்கள் பலியாவதை தடுக்கலாமே? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.