6 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் தணிந்த கோடை வெப்பம்
குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கோடை வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று மாலை 04:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இது இரவு 10:00 மணிக்கு மேலும் நீடித்தது. 6 மணிநேரம் நீடித்த இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.