குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு குறித்து ஆய்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உட்கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.;

Update: 2023-03-06 14:30 GMT

குமாரபாளையத்தில் ஜி.ஹெச்.ல் கூடுதல் புதிய கட்டிடத்தில் உள் கட்டமைப்பு தேவைகள் குறித்து, நகர தி.முக. செயலர் செல்வம் ஆய்வு செய்தார். தலைமை டாக்டர் பாரதி உடனிருந்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கூடுதல் கட்டிடங்களை நாமக்கல்லில் சில நாட்கள் முன்பு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்தில் உள் கட்டமைப்புக்கு என்னென்ன தேவை என்பது குறித்து, நாமக்கல் மாவட்ட தி.மு.க.செயலர் மதுரா செந்தில் உத்திரவின் பேரில், நகர தி.மு.க. செயலாளர் செல்வம், அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, தலைமை டாக்டர் பாரதியிடம் ஆலோசனை செய்தார்.

டாக்டர் பாரதி சில ஆலோசனைகள், தேவைகள் குறிப்பிட்டு சொல்ல, அதனை மாவட்ட செயலர் ஆதரவுடன் நிறைவேற்றி தருவதாக செல்வம் கூறினார். ஆய்வின் போது, தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 300க்கும் மேலான உள் நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் வசதி மிகவும் அத்தியாவசியமானது.

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் நீண்ட நாட்களாக தண்ணீர் குழாய் பழுதான நிலையில் இருந்தது. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, குழந்தைக்கு தங்க மோதிரம், உள் நோயாளிகளுக்கு பால், பழங்கள் கொடுக்க வந்த தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில், நகர தி.மு.க. செயலர் செல்வம் வசம், டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். அவரது உத்திரவின் பேரில் ஒரே நாளில் பழுதான குழாய் சரி செய்யப்பட்டு, தண்ணீர் விநியோகம் சீரானது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்து உணவு வழங்கினார்.

Tags:    

Similar News