'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாமில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

Namakkal News Today -குமாரபாளையத்தில் நடைபெற்ற, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாமில், முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-12 00:36 GMT

பயிற்சி முகாமில், ஆய்வு நடத்திய முதன்மை கல்வி அலுவலர்.

Namakkal News Today -குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில், 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளிபாளையம் வட்டார அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் 268 பேர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம் 15 வகுப்புகளில் நடைபெற்றது. குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மழைநீர் தேங்கியுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

தமிழக அரசின் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, கல்வித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்று. ஏனெனில், இன்றைய மாணவர்கள், நாளைய எதிர்காலம் என்பதால், அவர்கள் சிறப்பான கல்வி பெற அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் கல்வி உதவி தொகை, நோட்டுகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மடி கணினி, சீருடை, மதிய உணவு, பள்ளி மற்றும் கல்லூரி கட்டுமான பணிகள், தேர்வு செலவினங்கள், ஆசிரியர் சம்பளம், உள்ளிட்ட பல செலவுகள் செய்யபடுகிறது.

வட்டார வள மையங்கள் மூலம் ஆசிரியர் பயிற்றுனர்களால், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் கல்வி கற்பிக்கபட்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கொண்டு வருகிறார்கள். முதல் பட்டதாரி, பெண் குழந்தைகள் கல்வி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, எனும்படி, மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் படித்தாலும், நன்கு படித்து வாழ்வில் முன்னேற்றம் பெறுகிறார்கள். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் வாழ்க்கையை தமிழக அரசு தரமுள்ளதாக ஆக்குகிறது. சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தகுதி தேர்வு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, பல்வேறு தேர்வுகளில் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்தது வருகிறார்கள். என்.சி.சி. மூலம் சிறந்த பயிற்சி பெற்று, ராணுவ துறையில் சேர்ந்து சேவை செய்யும் மாணவர்களும் உண்டு.

மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதை பார்த்து சந்தோசப்படும் நபர் ஆசிரியர்களே..அவர்கள் ஏணியாக நின்று உதவி செய்து, பலருக்கும் ஏணியாக இருந்து மாணவர் சமுதாயத்தினை உருவாக்கி வருகிறார்கள். எனவே, சிறப்பான கல்வியைத்தரும் வகையில், இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்தி, ஆசிரிய பெருமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News