கல்வி உபகரணங்கள் வாங்க கடைகளில் குவிந்த பள்ளி மாணவர்கள்
குமாரபாளையத்தில் கல்வி உபகரணங்கள் வாங்க மாணவ மாணவியர் ஸ்டேஷனரி கடைகளில் குவிந்தனர்;
குமாரபாளையத்தில் கல்வி உபகரணங்கள் வாங்க ஸ்டேஷனரி கடைகளில் குவிந்த மாணவ மாணவியர்
குமாரபாளையத்தில் கல்வி உபகரணங்கள் வாங்க மாணவ மாணவியர் ஸ்டேஷனரி கடைகளில் குவிந்தனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளிகள் ஜூன் 12ல் திறக்கப்பட்டன. மாணவ, மாணவியர் தங்களுக்கு தேவையான பேனா, பென்சில், எழுதும் பேட், ரப்பர், பென்சில் பாக்ஸ், டிபன் பாக்ஸ், நோட்டுக்கள், ஸ்கெட்ச் பேனாக்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வாங்க, தங்கள் பெற்றோர்களுடன் ஸ்டேஷனரி கடைகளில் குவிந்தனர்.கல்வி உபகரணங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்காக கடைகளில் குவிந்து வருகின்றனர். புத்தகத்தை, டிபன் பாக்ஸ், பேனா, பென்சில், சிலேட் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்க, குழந்தைகள் ஆர்வத்துடன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கல்வி உபகரணங்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு புத்தக பைகள் 500 முதல் 700 ரூபாய் வரை வாங்கியதாகவும், தற்போது ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருந்தால், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவாகிறது எனவும் கூறுகின்றனர். சென்ற ஆண்டை காட்டிலும் பேனா, பென்சில், இங்க் பாட்டில், லாங் சைஸ் நோட், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.