பள்ளிபாளையத்தில் அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - பரபரப்பு
குமாரபாளையம் அருகே பள்ளிபாளையத்தில், அரசு பள்ளி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே, பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர், ஆண்களை போல் கட்டிங் செய்து கொண்டும், ஆண்களை போல் மேக்அப் போட்டுக் கொண்டும் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், உடன் படிக்கும் மாணவிகள், இவரை கிண்டல் செய்துள்ளனர் என்றும், வகுப்பு ஆசிரியையும் மாணவியிடம் இதுபற்றி கேட்டதாகவும் தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அந்த மாணவி, நேற்று பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த மாணவிகள், ஆசிரியைகள், உடனடியாக முயற்சி செய்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
மேலும், ஆசிரியை திட்டியதை கண்டித்து பள்ளி மாணவியர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை வசந்தியிடம் பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.