ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் ஜிம்கோச் மாநில அளவிலான உடலமைப்பு போட்டியில் சாதனை

ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் ஜிம்கோச் மாநில அளவிலான உடலமைப்பு போட்டியில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-01-07 11:53 GMT

ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜிம்கோச் மணிவண்ணன்.

ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின், மாணவர்களுக்கான  ஜிம் கோச் மணிவண்ணன் திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்களுக்கான உடல் கட்டமைப்பு போட்டியில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

நாமக்கல் மாவட்டத்தில் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம் சார்பில் பொறியியல், மருத்துவம், கலை,அறிவியல் கல்லூரிகள் மற்றும் ஆங்கில,தமிழ் மொழி வழி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இந்த நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்ற பல மாணவர்கள் நம் நாட்டில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் உயர் பதவிகளில் பணிபுரிந்து  வருகின்றனர்.

உடல் திறனை காட்டும் ஜிம் கோச் மணிவண்ணன்.

அதேபோல கல்வியில் மட்டும் இல்லாமல் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதிலும் ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம் அக்கறை கொண்டுள்ளது. அதற்காகவே சிறந்த ஆசிரியர்களை பணியமர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மாணவர்களுக்கு ஜிம் பயிற்சி வழங்குவதற்கு மணிவண்ணன் என்ற கோச் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான ஆண்களுக்கான உடல் கட்டமைப்பு போட்டியில் கலந்துகொண்டார். அதில் அவர்  3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை ஜே.கே.கே.என் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை மற்றும் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா  ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News