மாநில அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி
குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் சார்பில் மாநில அளவில் ஆண்கள் இரட்டையர் இறகுபந்து போட்டி நடந்தது.;
குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் சார்பில் மாநில அளவில் ஆண்கள் இரட்டையர் இறகுபந்து போட்டி நடந்தது.
குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் சார்பில் மாநில அளவில் ஆண்கள் இரட்டையர் இறகுபந்து போட்டி
குமாரபாளையம் அபெக்ஸ் கிளப் சார்பில் நடந்த மாநில அளவிலான ஆண்கள் இரட்டையர் இறகுபந்து போட்டியை முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ தொடக்கி வைத்தார். இதில் 32 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை குமாரபாளையம் கார்திக்சபரி, நவீன்- அணியினர், இரண்டாம் பரிசினை பவானி கவின், குப்புராஜ் அணியினர், மூன்றாம் பரிசினை குமாரபாளையம் அரவிந்த், பிரனேஷ் அணியினர், நான்காம் பரிசை ஆத்தூர் அஸ்வின், மணி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அபெக்ஸ் கிளப் தலைவர் விடியல் பிரகாஷ் பரிசினை வழங்கி பாராட்டினார். சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் சந்திரன், சம்பத்,வெங்கடேஷ், பாபு, சுந்தர், ஹரிகிருஷ்ணன், தீனா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் குமாரபாளையம் அபெக்ஸ் சங்கத்தார், ஈரோடு கே.பி.என்.நர்சிங் ஹோம் சார்பில் பொது மற்றும் இருதயம் சம்பந்தமான இலவச மருத்துவ முகாம் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. முகாமை கவுன்சிலர் புருஷோத்தமன் துவக்கி வைத்தார். இதில் டாக்டர்கள் அத்தீப், தாரணி தங்கம் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் மாரடைப்பு, இருதயம் செயலின்மை, ஆஞ்சியோகிராம், பேஸ்மேக்கர், கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டன. முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ, செயலர் கார்த்தி, மனோகர், தவமணி, சம்பத், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அபெக்ஸ் சங்கம் சார்பில் உதவிகள்
முதியோர் தினத்தையொட்டி குமாரபாளையம் அபெக்ஸ் சங்கத்தார் சார்பில் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர் மற்றும் அவரது துணைவியார் தலைமையில் எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியோர்களுக்கு ௨ சிப்பம் அரிசி, இனிப்புகள், பிஸ்கட், பழங்கள் வழங்கப்பட்டன. இதில் சங்க தலைவர் பிரகாஷ், முன்னாள் தலைவர் மனோகர், விவேக் உள்பட பலர் பங்கேற்றனர். மையத்தின் நிர்வாகி ஹேமமாலினி மற்றும் முதியோர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.