உடல் நலமில்லாமல் உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ. -க்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
குமாரபாளையத்தில் உடல் நலமில்லாமல் . உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்;
குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ. சண்முகம் .(பைல் படம்)
குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ.சண்முகம் உடலுக்கு மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில், திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி தலைமையில் ஆயுதப்படை போலீசார் சார்பில் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு தனிப்பிரிவு எஸ்.எஸ்.ஐ. ஆக சண்முகம் பணியாற்றி வந்தார். சில மாதங்கள் முன்பு சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்டைமேடு பகுதியில் உள்ள போக்குவரத்து போலீசார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ. யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சில நாட்கள் உடல்நலமில்லாமல் இருந்து வந்த நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் இவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை 3: மணியளவில் இறந்தார். இவரது உடல் குமாரபாளையம் காவேரி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. போலீசார், நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.இறந்த எஸ்.எஸ்.ஐ.சண்முகம் உடலுக்கு மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில், திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி தலைமையில் ஆயுதப்படை போலீசார் சார்பில் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடல் குமாரபாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.