குமாரபாளையத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டி செய்திகள்

Namakkal News -குமாரபாளையத்தில் ஆடவர், மகளிர் கபாடி போட்டிகள் மற்றும் பள்ளி மாணவியர்களுக்கான கைப்பந்து நடைபெற்றன

Update: 2022-10-31 09:45 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற கபாடி போட்டியினை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் துவக்கி வைத்தார்.

Namakkal News -நாமக்கல் மாவட்ட கபடி கழகம் சார்பில் குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கபாடி போட்டி இரு நாட்கள் நடைபெற்றது. இதில் ஆடவர் 42 அணியினரும், மகளிர் 10 அணியினரும் பங்கேற்றனர்.

போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க. செயலர் வட்டூர் தங்கவேல், குமாரபாளையம் நகர செயலாளர் செல்வம், தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, முன்னாள் தலைவர் செல்லமுத்து, இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் மகளிர் அணியில் திருச்செங்கோடு அன்னை தமிழ் அணியினர் முதல் பரிசும், பள்ளிபாளையம் தங்கராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் இரண்டாம் பரிசும், பள்ளிபாளையம் பவித்ரா நினைவு அணியினர் மூன்றாம் பரிசும், குமாரபாளையம் எம்.கே.பில்டர்ஸ் அணியினர் நான்காம் பரிசும் பெற்றனர்.

வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கபரிசு மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆடவர் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நடுவர்களாக சண்முகசுந்தரம், செல்வராஜ், ஹரிஹரன், தங்கவேல், செந்தில்,உள்பட பலர் பங்கேற்றனர்.


தேசிய அளவிலான போட்டிக்கு குமாரபாளையம் கபாடி வீரர் தேர்வு

தேசிய அளவிலான போட்டிக்கு குமாரபாளையம் கபாடி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய அளவிலான 69வது சீனியர் ஆண்கள் கபாடி போட்டி ஹரியானா மாநிலத்தில் நேற்று முதல் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு அணியின் சார்பில் விளையாட குமாரபாளையத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை சேர்ந்த இவர் தமிழ்நாடு அணிக்காக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை பயிற்சியாளர் யுவராஜ் மற்றும் பலரும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

குமாரபாளையத்தில் மாநில அளவிலான கபாடி போட்டிகளை சேர்மன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் ராஜமாணிக்கம் நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். நகராட்சி கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ் தலைமை வகித்தனர். இந்த போட்டிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.

முதல் பரிசு பெற்ற குமாரபாளையம் ராஜமாணிக்கம் அணியினருக்கு 22 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை கவுன்சிலர் ஜேம்ஸ், 7 அடி கோப்பையை கவுன்சிலர் அழகேசன் வழங்கி பாராட்டினர். இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.பி.என் அணிக்கு 17 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை எம்.கே. பில்டர்ஸ் மணிகண்டன், 6 அடி கோப்பையை மகாத்மா கபாடி கிளப் அணியை சேர்ந்த நாகராஜ் வழங்கி பாராட்டினர்.

மூன்றாம் பரிசு பெற்ற ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு 12 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை 2வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி அப்பாஸ், 5 அடி கோப்பையை ராஜமாணிக்கம் நண்பர்கள் குழுவினர் வழங்கி பாராட்டினர். நான்காம் பரிசு பெற்ற ஏ.இசட். கன்னியாகுமரி அணிக்கு 7 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை வி.எஸ்.ஏ. பில்டர்ஸ் விக்னேஷ், சுமதி சந்திரன், 4 அடி கோப்பையை சின்னப்பநாயக்கன்பாளையம் நண்பர்கள் கபாடி குழுவினர் வழங்கி பாராட்டினர்.

சிறந்த ரைடருக்கான பரிசினை பெற்ற ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர் சண்முகத்திற்கு, குளிர்சாதன பெட்டியை எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் மற்றும் ஈரோடு சில்க்ஸ் நிறுவனத்தார் வழங்கி பாராட்டினர்.

சிறந்த தடுப்பாட்டக்காரர் சிறப்பு பரிசினை பெற்ற ராஜமாணிக்கம் அணி வீரர் சத்தியமூர்த்திக்கு சைக்கிளை தி.மு.க. மாநில தகவல் தொழில் நுட்ப இணை செயலர் செந்தூர் மொபைல்ஸ் சவுந்தர் வழங்கி பாராட்டினார். நிர்வாகிகள் ராஜா, உமாபதி, சுப்பிரமணி, சசிகுமார், மணிகண்டன், ஜெயக்குமார், யுவராஜா, முத்து, சதீஷ்குமார், மேகநாதன் உள்ளிட்ட பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


மாநில அளவிலான போட்டிக்கு தேர்வான குமாரபாளையம் பள்ளி மாவட்ட அளவிலான பள்ளி மாணவியர்களுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி 

மாவட்ட அளவிலான பள்ளி மாணவியர்களுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நாமக்கல்லில் நடத்தப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 8 பள்ளிகள் பங்கேற்றன. குமாரபாளையம் ஜே.கே.கே. முனிராஜா மெட்ரிக் பள்ளியும், வரகூர் அரசு பள்ளியும் இறுதி போட்டியில் மோதியது. இதில் முனிராஜா பள்ளி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. மொத்தம் நடைபெற்ற 3 செட்களில், முனிராஜா பள்ளி 2 செட்களில் 25 புள்ளிகள் பெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக மாநில அளவில் தேர்வான பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவியர்களுக்கு தாளாளர் ஜெயபிரகாஷ், கல்வி நிறுவன தலைவர் வசந்தகுமாரி முனிராஜா, முதல்வர் வள்ளி, உடற்கல்வி ஆசிரியர் மணி உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

கபடி வீரர் மறைவுக்கு குமாரபாளையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடம்புலியூர் அருகில் புறங்கனி கபடி அணியை சேர்ந்த வீரர் விமல்ராஜ், விளையாடிக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து கபடி மைதானத்திலேயே  வீரமரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு குமாரபாளையம் தெரசா கபடி குழுவின் சார்பில் முனிராஜ், துரை தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தி, அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News