அரசு பள்ளி மாணவர்களுடன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அரசு பள்ளி மாணவர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.;

Update: 2023-09-09 14:45 GMT

குமாரபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அரசு பள்ளி மாணவர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதி, 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சில நாட்கள் முன்பு நிறைவு பெற்று, மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.

அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி சேவைகள் செய்து வரும் விடியல் ஆரம்பம் சார்பில், அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுடன் 24 மனை மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடத்தப்பட்டது. மாணாக்கர்கள் நன்கு கல்வி கற்கவும், வாழ்வில் முன்னேறவும் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

கோவிலில் தெய்வங்களை எவ்வாறு வழிபட வேண்டும் என கற்றுத்தரப்பட்டது. இவர்களுக்கு கல்வி உபகரணங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சமூக சேவகி சித்ரா, தீனா, சண்முகம், உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா

குமாரபாளையத்தில் வ.உ.சி. பிறந்த நாள் மற்றும் ஆசிரியர் தினவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, ஆசிரிய பெருமக்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

விடியல் ஆரம்பம் சார்பில் நடந்த விழாவில் சுந்தரம் நகர் நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பலதா தலைமை வகித்தார். மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தீனா, சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த விழாவில் வ.உ.சி. மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படங்களுக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகி சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News