விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமருக்கு சிறப்பு வழிபாடு
குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது;
குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் கோட்டச் செயலாளர் சபரிநாதன் கூறியதாவது: ராமபிரான் மீண்டெழுந்த தினமான டிச. 6ல் நினைத்த காரியம் எல்லாம் வெற்றியடையும் என்பதை நமக்கு நிரூபித்த நாளாக திகழ்ந்து வருகிறது. இந்நாளில் நாம் எடுத்த காரியம் நல்ல முறையில் நடைபெறுவதற்காக நாம் இருக்கும் பகுதிகளில் இன்றைய தினம் பகவான் ஸ்ரீ ராமபிரானின் திருவுருவப்படத்திற்கு பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் பகுதியில் இந்துக்களின் வெற்றித் திருநாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்டச் செயலாளர் சபரிநாதன், மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் முருகன், சந்திரன், நாகராஜன், ராதாகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
விசுவ இந்து பரிசத், ஆங்கில மொழி: World Hindu Council, சுருக்கமாக விஎ.ஹெச்.பி என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு, இந்துத்துவா கொள்கை உடைய வலது சாரி இந்து தேசியவாத அமைப்பாகும். சுவாமி சின்மயானந்தர் ஆசியுடன் எம். எஸ். கோல்வால்கர், எஸ். எஸ். ஆப்தே ஆகியோர்களால் 29 ஆகஸ்டு 1964இல் புதுதில்லியில் துவக்கப்பட்டது.