ரெட்டி குலத்தார் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் ரெட்டி குலத்தார் சிறப்பு வழிபாடு நடத்தினர்;
குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவில்
குமாரபாளையம் கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் ரெட்டி குலத்தார் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
குமாரபாளையம் அனைத்து காளியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி மகா குண்டம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, திருக்கல்யாணம், திருவீதி உலா, மஞ்சள் நீர் மெரவனை, ஊஞ்சல் விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதன் பின் தினம் ஒரு சமூகத்தினர், தொழில் நிறுவனத்தார்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக ரெட்டி குலத்தார் சார்பில் காவிரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தாரின் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். காவிரி ஆற்றிலிருந்து தீர்தக்குடங்கள், பால் குடங்கள், மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில் தினமும் கட்டளைதாரர்கள் சிறப்பு வழிபாடு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்று வருகிறது. குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி மறு பூச்சாட்டு விழா நடைபெற்றது. மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்தனர். 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.