தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்!

குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவிற்கு நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.

Update: 2024-03-11 14:00 GMT

படவிளக்கம் :

குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட செயலர் மதுரா செந்தில் உதவியாளர் தேவராஜ் வசம், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நிர்வாகிகள் ரவி, செல்வம் உள்ளிட்ட பலர் அழைப்பிதழ் வழங்கினர்.

தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கிய நிர்வாகிகள்

குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவிற்கு நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.

குமாரபாளையம் தி.மு.க. அலுவலகம் மேற்கு காலனி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் வடக்கு நகர பொறுப்பாளர் மற்றும் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். தெற்கு நகர நிர்வாக பணிகளை கவனிக்க அலுவலகம் இல்லாத நிலையில், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் வசம் அனுமதி பெற்று, தற்போது செயல்பட்டு வரும் கட்சி அலுவலகத்தில் ஒரு பகுதியை, கட்சி பணிகள் மேற்கொள்ள அலுவலகம் அமைத்துக்கொள்ள அனுமதி வேண்டினார். இதற்கு மாவட்ட செயலர் மதுரா செந்தில், மூத்த நிர்வாகிகள் ஆலோசனைப்படி, தெற்கு நகர அலுவலகம் அமைத்து கொள்ள அனுமதி வழங்கினார். இந்த அலுவலக திறப்பு விழா இன்று காலை 10:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை மாவட்ட செயலர் மதுரா செந்தில் அலுவலகத்தில் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், மாவட்ட செயலரின் உதவியாளர் தேவராஜ் வசம் கொடுத்தனர். மேலும் நகரில் உள்ள மூத்த நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதில் நிர்வாகிகள் ரவி, செல்வம், உள்பட பலர் உடனிருந்தனர். அலுவலக திறப்பு விழாவையொட்டி அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

குமாரபாளையம் தெற்கு நகர தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட செயலர் மதுரா செந்தில் உதவியாளர் தேவராஜ் வசம், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், நிர்வாகிகள் ரவி, செல்வம் உள்ளிட்ட பலர் அழைப்பிதழ் வழங்கினர்.

Tags:    

Similar News