பள்ளிபாளையத்தில் மண் வள பாதுகாப்பு பற்றிய விவசாயிகளுக்கான பயிற்சி

குமாரபாளையம் அருகே மண் வள பாதுகாப்பு பற்றிய விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

Update: 2022-03-19 15:30 GMT

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், மண்வள பாதுகாப்பு பற்றிய விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே மண்வள பாதுகாப்பு பற்றிய விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது. குமாரபாளையம் அருகே மண்வள பாதுகாப்பு பற்றிய விவசாயிகளுக்கான பயிற்சி,  பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் மண்வள பாதுகாப்பு, அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை முறையில் உரமிடுதல், ரசாயன உரங்கள் குறைத்து உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் இடுவதன் முக்கியத்துவம், மண் பரிசோதனை அவசியம், மண் மாதிரிகள் சேகரித்தல் செயல்முறைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை முறையில் உரமிடுதல், பூச்சி நோய் தாக்குதல், ஆகிய குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை அலுவலர் சவுந்தரராஜன், இயற்கை முறை விவசாயி யுவராஜ், உதவி வேளாண்மை அலுவலர் விஸ்வபிரியா, தொழிநுட்ப மேலாளர் பிரியங்கா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News