வாரச்சந்தையில் தொடர் செல்போன் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

குமாரபாளையம் அருகே வாரச்சந்தையில் செல்போன் திருட்டில் கைவரிசை காட்டும் வட இந்திய இளைஞர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

Update: 2022-06-25 13:30 GMT

குமாரபாளையம் அருகே வாரச்சந்தையில் செல்போன் திருட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இது குறித்து தனியார் கல்லூரி பேராசிரியர்கள் ரமேஸ், ராகுல், சண்முகம் கூறியதாவது:- வாரந்தோறும் வியாழக்கிழமையன்று குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் வட்டமலை பஸ் நிறுத்தம் பின்புறம் வாரச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு பல பகுதியிலிருந்து பொதுமக்கள் அதிக அளவில் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். தொடக்கத்தில் குறைவாக இருந்த இந்த சந்தையில் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் பலர் செல்போன், பணம், பைக்குகள் ஆகியவை திருடி வருகிறார்கள். கடந்த வாரம் சென்ற போது எங்கள் மூன்று பேரின் செல்போன்கள் காணாமல் போனது. சிம் கார்டை புதுப்பிக்க சென்ற போது, பலர் வந்து சிம் கார்டு புதுப்பிக்க வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, எங்களை போல் பலரும் மொபைல் போனை பறிகொடுத்துள்ளனர் என்று. இதில் வட மாநில இளைஞர்கள் பலர் சந்தை வளாகத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இனி வாரச்சந்தை கூடும் நாளில் போலீசார் நேரில் வந்து பொதுமக்களின் உடைமைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News