பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்
குமாரபாளையத்தில் பள்ளிபாளை யத்தில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம் நடந்தது;
குமாரபாளையத்தில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழுவினருக்கான பயிற்சி முகாம்
பள்ளிபாளையத்தில் பள்ளி மேலாண்மைக்குழுபயிற்சி முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பள்ளிப்பாளையம் வட்டார வள மையம் சார்பில் பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி அனைத்து வார்டு கவுன்சிலருக்கான பள்ளி மேலாண்மை குழு குறித்த பயிற்சி ஆவாரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்றது.
இந்த பயிற்சிக்கு பள்ளிப்பாளையம் நகர்மன்ற தலைவர் .செல்வராஜ் மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா ஆகியோர் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தனர். மேலும் பள்ளிபாளையம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் கனகராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இப்பயிற்சி முகாமில் பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்கள் பற்றியும், அக்குழுக்களின் உறுப்பினர்கள் , அவர்களின் பொறுப்புகள் , பள்ளி நிர்வாகம் குறித்த அவர்களின் பங்கு, அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம், மாற்று திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், பள்ளி மேலாண்மை குழு நடைமுறைகள், பள்ளி மேம்பாட்டு திட்டங்கள்,குழந்தை உரிமைகள் முதலானவற்றை அனைத்து உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சி கருத்தாளர்களாக பரமத்தி வட்டார ஆசிரியர் பயிற்றுநர் ராஜா, மல்லசமுத்திரம் பிள்ளா நல்லூர் பேரூராட்சி சமுதாய அமைப்பாளர் தேவகி ஆகியோர் பங்கேற்று அனைவருக்கும் பயிற்சி வழங்கினர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி, கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள்கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. அத்துடன், பள்ளிகளில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமையில் எஸ்எம்சி கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் நலத் உதவித் திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது