பள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்க ஆய்வு பணி தொடங்கியது

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், சாலை விரிவாக்க ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளன.

Update: 2021-04-29 05:42 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சாலை,  சேலம், நாமக்கல், சென்னை, கோயம்புத்தூர், உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் சாலையாக உள்ளது. மக்கள் தொகைக்கேற்ப வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் காலையில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையில் தேங்கி நிற்கும் சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.

எனவே பள்ளிபாளையம் சாலை, போக்குவரத்துக்கு போதுமானதாக இல்லாததால், எதிர்கால தொலைநோக்கு பார்வையுடன் பள்ளிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மேம்பாலம் அமைப்பது,  சாலை விரிவாக்கம் செய்வது என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய மாநில அரசு அனுமதியுடன் சாலை விரிவாக்க பணி ஆய்வு தொடங்கியது.

இந்நிலையில்,  இன்று காலை பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த நால்ரோடு பகுதியில்,  சாலை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை, ஊழியர்கள் மேற்கொண்டனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, தொடர்ச்சியாக சாலை விரிவாக்க பணி குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும்,  ஆய்வு முடிவுகளை மேல்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய பிறகு,  அவர்கள் அனுமதி கிடைத்ததும், அடுத்த கட்ட நகர்வுகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News