சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு

குமாரபாளையத்தில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு உண்டாகிறது.

Update: 2021-11-07 05:15 GMT

குமாரபாளையத்தில்,  சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

குமாரபாளையத்தில் போலீஸ் ஸ்டேஷன் முதல், சேலம் - கோவை புறவழிச்சாலை இணைப்பு பகுதியான கத்தேரி பிரிவு வரை,  இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சேலம் சாலையின் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை குறுகிய சாலையாக மாறியுள்ளது.

இதிலும் சாலையோர கடையினர், தள்ளுவண்டி  கடைகள், வியாபாரம் செய்து வருகின்றனர். இதில் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் நடந்து செல்பவர் கூட செல்ல முடியாது. மிக குறுகிய சாலையில் பலர் கார், டெம்போ, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க உரிய எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்; மீறி வாகனம் நிறுத்தினால், வாகன பறிமுதல், அபராதம்  உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News