ரோடு டிவைடருக்கு கருப்பு பெயின்ட் அடிக்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் டிவைடருக்கு கருப்பு பெயின்ட் அடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-15 04:45 GMT

குமாரபாளையம்,  சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல்,  ராஜம் தியேட்டர் வரை ஏற்கனவே டிவைடர் நிறுவி  போக்குவரத்து சீர்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் ராஜம் தியேட்டர் பகுதியில் இருந்து சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு வரை,  டிவைடர் வைக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது, இந்த பணிகள் நிறைவு பெற்று டிவைடருக்கு கருப்பு பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு காலி இடத்தையடுத்த புதிய டிவைடரில் பக்கவாட்டில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்படாததால்,  இரவில் வேகமாக வரும் வாகனங்கள் இந்த டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உயிரிழப்பு ஏற்படும் முன் இந்த டிவைடர்களின் பக்கவாட்டு பகுதியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஓட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News