குமாரபாளையத்தில் டூவீலர் மோதி அரசு பள்ளி மாணவன் உள்ளிட்ட இருவர் காயம்
குமாரபாளையத்தில் டூவீலர் மோதியதில், 5ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.;
குமாரபாளையம் கண்ணகி நகரில் வசிப்பவர் முருகேசன், 40. விசைத்தறி கூலித்தொழிலாளி. இவரது மகன் ஸ்ரீ சபரி, 11. அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். அக். 31ம் தேதி, 04:15 மணியளவில், தனது சைக்கிளில் கே.பி.பங்களா சாலை பிரிவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, இடைப்பாடி பக்கம் இருந்து வேகமாக வந்த டி.வி.எஸ். எக்ஸல் டூவிலர், சைக்கிள் மீது மோத, மாணவனும், டூவீலர் ஓட்டுனரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
போலீசார் விசாரணையில் டூவீலர் ஓட்டுனர் மேட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணி, 43, என்பது தெரியவந்தது. மாணவர் ஸ்ரீ சபரி மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேஸ்திரி மணி, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாணவருக்கு சிகிச்சை முடிந்து தற்போதுதான் வீட்டிற்கு வந்தார். இந்த விபத்து குறித்து மாணவனின் தந்தை முருகேசன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததன்பேரில், குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.