குமாரபாளையத்தில் கட்சிக்கொடிகளால் விபத்து அபாயம்

குமாரபாளையத்தில் கட்சிக்கொடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-05-30 10:45 GMT

குமாரபாளையத்தில் கட்சிக்கொடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் சேலம் சாலையின் நடுவேல் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு வரை டிவைடர்கள் வைக்கபட்டுள்ளன. இதில் ஆங்காங்கே மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கம்பங்களை அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட பலரும் கட்சிக்கொடிகளை கட்டுவது, வியாபார நிறுவனங்களின் விளம்பர பதாதைகள் வைப்பது, கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைப்பது என கட்டி வருகிறார்கள். கட்சிக்கொடிகள் சிறிய குச்சிகளில் கட்டப்படுவதால் அவை காற்றின் வேகத்தால் கம்பங்கள் சாலை பக்கமாக சாய்ந்து விடுகிறது. இதனால் டூவீலர்கள் ஓட்டுனர்களின் முகத்தில் மோதி நிலை தடுமாறி பலரும் கீழே விழுந்து காயமடைந்து வருகிறார்கள்.

எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, வர்த்தக நிறுவனத்தார் விளம்பர பதாதைகள் கட்டவும், கட்சிக்கொடிகள் கட்டவும், கண்ணீர் அஞ்சலி பேனர்கள் கட்டவும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News