என்.சி.சி. அலுவலருக்கு பணி நிறைவு விழா
குமாரபாளையம் அருகே என்.சி.சி. அலுவலருக்கு பணி நிறைவு விழா நடந்தது.;
குமாரபாளையம் அருகே என்.சி.சி. அலுவலருக்கு பணி நிறைவு விழா நடந்தது.
குமாரபாளையம் அருகே என்.சி.சி. அலுவலருக்கு பணி நிறைவு விழா நடந்தது.
15 ஆவது பட்டாலியனில் நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி 38 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பல்வேறு மாநிலங்களிலும்,எல்லைப் பகுதிகளிலும் பணியாற்றி, இறுதியாக 15வது தமிழ்நாடு பாட்டாலியினில் ஓய்வு பெற்றார். இவருக்கு பணி நிறைவு விழா குமாரபாளையம் அருகே சூளை பகுதியில் நடந்தது.
இவரை கமெண்டிங் அலுவலர் கர்னல் ஜெய்தீப் மற்றும் சுபேதார் மேஜர் சுரேஷ் ஆகியோர் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் வாழ்த்தினார்கள். மேலும் பட்டாலியன் ஹவில்தார் மேஜர் தன்ராஜ், சுபேதார் ராம், பிரீத், அன்பழகன், முருகன், தேசிய மாணவர் படை அலுவலர்கள் ராகவேந்திரன், செந்தில் குமார், அந்தோணிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி :குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் உலக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி தேசிய மாணவர் படை மற்றும் குமாரபாளையம் காவல்துறை சார்பில் இணைந்து நடத்தப்பட்டது. இதில் எஸ்.ஐ. சந்தியா மற்றும் எஸ்.எஸ்.ஐ. அமல்ராஜ் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தனர். முருங்கைக்காய் காடு, பெராந்தர்காடு, காந்திபுரம், சின்னப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வழியாக சென்ற பேரணி, மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. போதை பொருட்களுக்கு எதிரான கோஷங்கள் போட்டவாறு மாணவ, மாணவியர் சென்றனர். பொதுமக்களுக்கு இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தனர்.
மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ் மற்றும் ஆசிரியர்கள் தகவல் தொடர்பு ஆசிரியர் கவிராஜ், பேரிடர் மேலாண்மை குழு பொறுப்பு ஆசிரியர் மகேஷ் குமார், சாரணிய இயக்க ஆசிரியர் மாலதி, வசந்தி, அன்புக்கரசி, அப்பாதுரை ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்