வாலிபர் கொலையா? குமாரபாளையத்தில் உறவினர்கள் சாலை மறியல்

குமாரபாளையத்தில், வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-11-16 07:45 GMT

குமாரபாளையத்தில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய போலீசார்.

குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் வசித்து வந்தவர் அரவிந்த் (24). திருப்பூர் தனியார் நிறுவன ஊழியர். இதே வீதியில் வசிப்பவர் வெங்கடேசன், 28. தனியார் நிறுவன ஊழியர். இருவரும் நண்பர்கள். கடந்த நவ. 14 ஞாயிறு அன்று, திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்ற அரவிந்த், பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவரது தந்தை ஜெகதீஸ்,  குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இறுதியாக வெங்கடேஷ் வீட்டுக்கு போனதாக நண்பர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர், அவரை காணவில்லை என்பதால், வெங்கடேசன் மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும்; அரவிந்த் கொலை செய்யப்பட்டாரா? அவரது உடலை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கோரியும், வெங்கடேசன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும்,   குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனை, உறவினர்கள் முற்றுகையிட்டனர். அத்துடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன் நேரில் விசாரணை செய்தார்.

Tags:    

Similar News