குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ ஆய்வு: ரூ.6.32 லட்சம் அபராதம்

குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ திடீரென வாகனங்களை ஆய்வு செய்தார். அபராதமாக ரூ.6.32 லட்சம் வசூலிக்கப்பட்டது.

Update: 2021-11-15 12:00 GMT

 குமாரபாளையம் புறவழிச்சாலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை போக்குவரத்து ஆணையம் உத்திரவின்படியும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தல் பேரிலும்,  குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குமாரபாளையம் சத்யா, திருச்செங்கோடு பிரபாகரன் ஆகியோரால்,  வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 146 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம்,  வாகனத்தின் தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது, அதிக பாரம், அதிக உயரம் என்பது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ்,  6 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News