வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம்

குமாரபாளையம் அருகே, காற்றில் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்றுவதில் பொதுப்பணித்துறை மெத்தனம் காட்டி வருகிறது.

Update: 2022-05-07 23:45 GMT

வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியதில் பெரிய மரம் ஒன்று முறிந்து வாய்க்காலில் விழுந்துள்ளது.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், பூச்சக்காடு பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் ஓரமாக இருந்த பெரிய மரம் ஒன்று, முறிந்து வாய்க்காலில் விழுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடைந்து விழுந்த மரத்தை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பல நாட்கள் ஆகியும் இதனை அகற்ற மெத்தனம் காட்டி வருகிறார்கள். இதனால் ஆடு, மாடுகள் ஓட்டி செல்லவும், கால்நடைகளுக்கு தீவனங்கள் டூவீலரில் கொண்டு செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் இடையூறாக இருந்து வருகிறது. பலத்த காற்றினால் இதே பகுதியில் மற்றொரு மரம் ஒரு வீட்டின் மீது சாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News