லயன்ஸ் சங்கம் சார்பில் சேவைத்திட்ட உதவிகள் வழங்கல்
குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்கத்தினர் சேவைத்திட்ட உதவிகள் வழங்கினர்;
குமாரபாளையம் லயன்ஸ் சங்கம் சார்பில் பல்லக்காபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆளுநர் தமிழ்மணி நூலகம் திறந்து வைத்தார்.
குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்கத்தார் சேவைத்திட்ட உதவிகள் வழங்கினர்.
குமாரபாளையம் லயன்ஸ் சங்கத்தார் சார்பில் ஆளுநர் வருகையையொட்டி, பன்னாட்டு லயன்ஸ் சங்க சேவைத்திட்டங்களான புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி, அரசு பள்ளிகளுக்கு நூலகம் அமைத்தல், தேனீ வளர்ப்பு, மரக்கன்று நடுதல் ஆகியன செயல்படுத்தப்பட்டன. சங்க தலைவர் குமார்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் தமிழ்மணி பங்கேற்று, பேரணியை துவக்கி வைத்து, பல்லக்காபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 600 புத்தங்கங்கள் வழங்கி நூலகம் திறந்து வைத்தனர்.
பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நட்டு வைத்து, முன்னாள் தமிழ் ஆசிரியர் பெரியசாமி தோட்டத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் ஐந்திணை வைத்து, சேவைப்பணிகளை துவக்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன், லயன்ஸ் அமைச்சரவை செயலர் தில்லை நடராஜன், கூட்டு மாவட்ட ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைகள், ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினர். செயலர் அண்ணாமலை, பொருளர் நாராயணசாமி, பள்ளியின் பி.டி.ஏ. நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் மத்திய லயன்ஸ் சங்கத்தாரின் கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் மத்திய லயன்ஸ் சங்கத்தார், மத்திய இளம் லயன்ஸ் சங்கம், தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை மற்றும் ரத்த தான முகாம் சங்க தலைவர் ராஜண்ணன் தலைமையில் நடந்தது. இதில் 77 பேர் ஐ.ஓ.எல். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 65 பேர் ரத்ததானம் வழங்கினர். கண்ணில் புரை, தூரப்பார்வை, கண்ணில் நீர் அழுத்தம், கிட்டப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், தலைவலி ஆகியவைகளுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. நிர்வாகிகள் வேலுமணி, கொமாரசாமி, ராஜேந்திரன், மனோகரன், பொன்னுசாமி, பழனிசாமி, சுரேஷ், சந்திரசேகர், உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் தளபதி அரிமா சங்கம், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் ரத்ததான முகாம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது. கண்ணில் புரை உண்டாகுதல், மாறு கண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், நீர் வடிதல், கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். மாத்திரைகள், ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. ரத்ததான முகாமில் 92 பேர் ரத்ததானம் செய்தனர். ஈரோடு சுப்ரீம் ரத்த வங்கி அரசன் கண் மருத்துவமனை டாக்டர்கள் சேவையில் பங்கேற்றனர்.சங்க தலைவர் மாதேஸ்வரன், கோகுல்நாத், சுந்தரராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.