அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரண தொகுப்பு வழங்கல்
பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன;
குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரண தொகுப்பு வழங்கப்பட்டது.
குமாரபாளையம் அரசு பள்ளிகளில் பயிலும் 30 ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு என்.ஏ.ஏ.ஆர்.சி. பொது நல அமைப்பின் சார்பாக நோட்டு புத்தகங்கள் மற்றும் பேனா, கல்வி உபகரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் விழா தலைவர் யோகராஜ் தலைமையில் நடந்தது.
பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செயலாளர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் ஸ்டீல் ரோஜர், விடியல் பிரகாஷ், சித்ரா, ராணி, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா, 10,12ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்குதல், ஸ்கூல் பேக் வழங்குதல், ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் வழங்குதல், விளையாட்டு போட்டி ஆகிய ஐம்பெரும் விழா தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை செயலர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடந்தது.
இதில், 10ம் வகுப்பு தேர்வில் 480 மதிப்பெண்கள் பெற்ற அபிதா, 426 மதிப்பெண்கள் பெற்ற சரண்யா, 417 மதிப்பெண்கள் பெற்ற சத்யஸ்ரீ, 12ம் வகுப்பு தேர்வில் 523 மதிப்பெண்கள் பெற்ற விமல்ராஜ், 505 மதிப்பெண்கள் பெற்ற கௌரிஸ்ரீ, 501 மதிப்பெண்கள் பெற்ற பிரியதர்ஷினி ஆகியோருக்கு கால் பவுன் தங்கப்பதக்கம், ஒரு கிராம் தங்கப்பதக்கம், 10 கிராம் வெள்ளிப்பதக்கம் முறையே வழங்கப்பட்டது. மேலும் வார்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது.
தி.மு.க. நகர செயலர்கள் செல்வம், ஞானசேகரன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சந்தான ஐயப்பன் உள்ளிட்ட பலர் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.