குமாரபாளையம் தாலுகா பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்புக்காக குமாரபாளையம் தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில், நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.;
மாதாந்திர மின் பராமரிப்புக்காக, நாளை வெள்ளிக்கிழமை, குமாரபாளையம் தாலுகாவில் உள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.மின்சார வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
குமாரபாளையம்: காலை 9 to 1 சி.என். பாளையம் மின்பாதை. மதியம் 1 to 5 குமாரபாளையம் நகரம்
பள்ளிபாளையம்: காலை 10 to 5 காவேரி ஆர்.எஸ்., அம்மன் நகர், பெரும்பாறை காடு, வசந்த நகர், காந்திபுரம், பெரியார் நகர், நேரு நகர்.
சங்ககிரி: காலை 10 to 4, வரை பாதரை, அம்மன் கோயில், ஜெயசூர்யா கார்டன், ஆனைக்கல் காடு, ஆத்திகாட்டூர்.