பல்லக்காபாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

Update: 2023-11-21 12:15 GMT

Namakkal news- வரும் 7ம் தேதி மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நவ.22ல் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நவ.22ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் ஹைடெக் பார்க் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News