செப். 26 -ல் பல்லக்காபாளையம் பகுதியில் மின் நிறுத்தம்
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையப் பகுதிகளில் பணிகளுக்காக வரும் செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிப்பு;
பைல் படம்
பல்லக்காபாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக செப். 26ல் (செவ்வாய்க்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்ட தகவல்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் ஹைடெக் பார்க் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு செப். 26ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்