மின் மாற்றியை ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள்

குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை இடமாற்றம் செய்வது குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு;

Update: 2023-05-28 11:45 GMT

மின் மாற்றியை இடம் மாற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்த மின்வாரிய அதிகாரிகள்

குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் மாற்றியை மாற்றி அமைப்பது குறித்துமின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். குமாரபாளையம் நகரின் மையத்தில் உள்ள மதீனா ஸ்டோர் அருகில் மின்மாற்றி உள்ளது.இதனால் பயணிகள் சாலையை கடக்கும்போதும், பேருந்து மற்றும் வண்டிகள் வரும்போது ஒதுங்கவும் இடமின்றி பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.  இவ்விடத்தில் பல விபத்துகளும் ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களும் உண்டு என்பதால், மின்மாற்றியை இடம் மாற்றி பயணிகளின் போக்குவரத்துக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சேலம் மெயின் ரோடு கத்தேரி பிரிவிலிருந்து ராஜம் தியேட்டர் வரை சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும். இந்த புகாரின் படி உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பள்ளிப்பாளையம் உதவி செயற்பொறியாளர் கோபால் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து மின்மாற்றி மற்றும் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களையும் ஆய்வு செய்தனர்.  ஆய்வின்போது, மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலர் சித்ரா, மல்லிகா, விமலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



Tags:    

Similar News