பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
குமாரபாளையத்தில் பாமகவினர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10.5 % இட ஒதுக்கீடு வழங்க கோரி தபால் மூலம் மனு அனுப்பினர்
குமாரபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசு மற்றும் நீதியரசருக்கு தபால் மூலம் மனுக்கள் அனுப்பினர்.
குமாரபாளையத்தில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியது கண்டித்து நீதிமன்றத்தில் சிலர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்ற விசாரணை செய்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பளித்து ஓராண்டு கடந்தும் இன்னும் தமிழக அரசு வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசுக்கும், நீதியரசர் பாரதிதாசன் அவர்களுக்கும் குமாரபாளையம் தபால் நிலையம் மூலம் சுமார் 500 கடிதங்கள் அனுப்பு போராட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில் நடந்தது..
]முன்னதாக பள்ளிபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த 50-க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் குமாரபாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் வந்தடைந்ததும் தங்கள் கடிதங்களை தபால் பெட்டிகளில் போட்டு தங்கள் எதிர்ப்புகளை காட்டினார்.