கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த வீரகுமாரர்கள்
குமாரபாளையத்தில் பூணூல் பண்டிகையையொட்டி வீரகுமாரர்கள் அம்மனை கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர்.;
குமாரபாளையத்தில் பூணூல் பண்டிகையையொட்டி வீரகுமாரர்கள் அம்மனை கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர்.
குமாரபாளையத்தில் பூணூல் பண்டிகையையொட்டி வீரகுமாரர்கள் அம்மனை கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர்.
ஆவணி அவிட்டத்தையொட்டி ஆண்டுதோறும் பூணூல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் வீரகுமாரர்கள் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் ஆவணி அவிட்டம், பூணூல் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்றுமுன்தினம் காலை 06:00 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று காலை 05:00 மணியளவில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.
மாலை 07:00 மணியளவில் சக்தி அழைத்தல் வைபவம் நடந்தது. காளியம்மன் கோவில் பகுதியில் இருந்து, வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர். சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக நடந்த சக்தி அழைப்பு, விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில் வலகம் முன்பு அலங்கார பந்தலில் நிறைவு பெற்றது.
இங்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. பக்தர்கள் வழிநெடுக காத்திருந்து அம்மனை வழிபட்டனர். சக்தி அழைப்பின் போது எதிர்பாரதவிதமாக மழை தூறல் பெய்தது அனைவரையும் குளிர்ச்சியடைய வைத்தது.