3 சாயப்பட்டறைகளுக்கு மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகள் அதிரடி
குமாரபாளையத்தில் 3 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.;
3 சாயப்பட்டறைகளுக்கு சீல் மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்
குமாரபாளையத்தில் 3 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்து மாசுக்கட்டுபாட்டு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமாரபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சாயப்பட்டறைகள் உள்ளன. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்தி கரிப்பு செய்யாமல் நேரிடை யாக காவிரி ஆற்றில் கலக்க விடுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து பொக்லின் மூலம் சாயப்பட்டறைகளை இடித்து வந்தனர்.
பெரிய அளவிலான சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தாலும் சில சாயப்பட்டரையினர் கழிவுநீரை நேரடியாக வெளியேற்றி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் வந்தது. இதன் படி, குமாரபாளையம் கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், காந்திபுரம் ஆகிய பகுதியில் விதிமீறி செயல்பட்ட சாயப்பட்டறைகளில் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர் மணிவண்ணன் தலைமையில் ஆய்வு செய்தனர். இவைகளில் விதிமீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் மூன்று சாயப்பட்டறைகளுக்கு சீல் வைத்தும், மின் இணைப்பு துண்டிப்பு செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் தாசில்தார் சண்முகவேல், ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஒ. ஜனார்த்தனன், மாசுக்கட்டுப்பாடு அலுவலக உதவி பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், உதயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.