காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை ஆய்வு செய்த போலீஸ் எஸ்.பி.

குமாரபாளையம் அருகே காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை போலீஸ் எஸ்.பி. இன்று ஆய்வு செய்தார்.;

Update: 2021-09-15 15:45 GMT

காவலர் குடியிருப்பு கட்டிட இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி. 

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் வர உள்ள  காவலர் குடியிருப்பு கட்டிடத்தை சில நாட்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வீட்டு வசதி துறை ஏ.டி.ஜி.பி., விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். இந்த இடத்தையும், சூரியகிரி மலை அருகே உள்ள இடத்தையும் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த இரு இடங்களிலும் நிலத்தடி நீரின் அளவு குறித்து தகவல் சேகரித்து தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளார். இதன் பின் இங்கு காவலர் குடியிருப்பு வருமா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர். காவலர் குடியிருப்பு இடம் ஆய்வு 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இன்னும் இது நிறைவு பெறாத நிலையில் தற்பொழுதும் இழுபறி நிலை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News