குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க உயர் கோபுரம் அமைத்த போலீசார்
குமாரபாளையத்தில் தீபாவளி கூட்டம் கண்காணிக்க போலீசார் உயர் கோபுரம் அமைத்தனர்.;
நாடு முழுவதும் அக்டோர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குமாரபாளையம் நகரில் துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள் தங்கள் கைவரிசையை காட்டுவது வழக்கம். அதுபோல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், கூட்ட நெரிசலை சமாளித்து போக்குவரத்து சீர் செய்யவும் போலீசாரால் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் இந்த உயர்கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளன.