குற்றச்செயல்களை தடுக்க குமாரபாளையம் போலீசார் தீவிர கண்காணிப்பு

குமாரபாளையத்தில், தீபாவளி கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-11-02 23:30 GMT

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் எஸ். ரவி

தீபாவளி பண்டிகை நாளை ( நவ. 4,)  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்கள் புத்தாடை வாங்கி, பட்டாசுகளை வெடித்து, நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.  ஆடைகள், பட்டாசுகளை வாங்குவதற்காக,  கடைவீதிகளில் மக்கள் திரண்டுள்ளனர். கடைகளில் இறுதிகட்ட விற்பனை சூடுபறக்க நடந்து வருகிறது.

நாளை தீபாவளி என்பதால், கடைவீதிகளில் மக்கள் திரண்டுள்ளனர். அதேநேரம், தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி, திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. குமாரபாளையத்தில், தீபாவளி கூட்டத்தில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி,  குமாரபாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி கூறியதாவது: குமாரபாளையம் பகுதியில் தீபாவளி கூட்ட நெரிசலில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமால் இருக்க, பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். குறிப்பாக, சேலம் சாலையில் 2 கண்காணிப்பு கோபுரங்கள், பஸ் ஸ்டாண்டில் ஒரு கண்காணிப்பு கோபுரம் என, மூன்று கோபுரங்கள் அமைக்கபட்டு, போலீசார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காவேரி பாலம் அருகில் மற்றும் கத்தேரி பிரிவு பகுதியில்,  இரண்டு சோதனைச்சாவடிகள் அமைக்கபட்டுள்ளன. நடமாடும் கண்காணிப்பு பணியை,  இரண்டு குழுவினர் செய்து வருகிறார்கள். வாகனச்சோதனை,  இரண்டு குழுவினர் மேற்கொண்டுள்ளனர். குமாரபாளையம் நகரில் போலீஸ் பட்டாசு கடை உட்பட,  16 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும், 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News