பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
குமாரபாளையம் பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.;
குமாரபாளையம் பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
ஏப்.19 லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பல கட்ட தேர்தல் முன்னேற்பாடு பணிகள் செய்து வருகின்றனர். போலீசார் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் தாபா ஓட்டல்களில் மது விற்பனை செய்யவோ, மது குடிக்க அனுமதிக்கவோ கூடாது எனவும், பார்களில் அரசு நிர்ணயம் செய்த நேரம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் எனவும், மற்ற நேரங்களில் மது விற்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பிரச்சார சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
பொதுமக்கள் பெட்ரோல் பங்க்கிற்கு கேன் மற்றும் பாட்டில் கொண்டு வந்து பெட்ரோல் கேட்டால் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. போலீசாரின் இந்த தகவலை ஏற்று, இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உறுதி கூறினர். எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், கெங்காதரன், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், முருகேசன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட போலீசார் பலரும் உடனிருந்தனர்.