கள்ள மார்க்கெட்டில் மது விற்பனையை தடுக்கக் கோரி பாமகவினர் மனு

குமாரபாளையத்தில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை தடுக்க கோரி பாமக சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது;

Update: 2023-05-16 15:45 GMT

கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை தடுக்க கோரி பா.ம.க சார்பில்   காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை தடுக்க கோரி பா.ம.க. சார்பில் போலீசில் மனு கொடுக்கப்பட்டது. குமாரபாளையம் நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் சந்து கடைகள் மூலம் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் குடும்ப செலவிற்கு வீட்டிற்கு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு, பல குடும்பத்தினர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு கூட தவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலமுறை பா.ம.க. சார்பில் சம்பந்தப் பட்டவர்களிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை. ஆகவே, இதனை தடுக்க வேண்டி பா.ம.க. சார்பில் நகர செயலர் கோவிந்தன் தலைமையில் போலீசில் மனு கொடுக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.



Tags:    

Similar News