குமாரபாளையத்தில் வரும் 15ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
குமாரபாளையம் அருகே ஆனங்கூர், சமயசங்கிலியில் நாளை மறுநாள் (15ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஆனங்கூர், சமயசங்கிலியில் நவ. 15ம் தேதி மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் , சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் நவ. 15ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுகிறது.
இதனால், சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் நவ. 15ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதனால் தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டுபாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தாகோயில், தாசக்கவுண்டம்பாளையம், பள்ளிக்கவுண்டம்பாளையம், ஆனங்கூர், சின்ன ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியாம்பாளையம், ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.