குமாரபாளையத்தில் குழாய் உடைப்பு: நாளை முதல் குடிநீர் விநியோகம்
குமாரபாளையத்தில்ழாய் உடைப்பை நகராட்சி நிர்வாகத்தினர் சீர்படுத்திய நிலையில் நாளை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியில் குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் சாய நீர் கலந்து நகரின் பல பகுதிகளில் விநியோகம் ஆனது. இதனால் பொதுமக்கள் கொதிப்படைந்தனர்.
பி.எட். கல்லூரி அருகில் இருக்கும் வாட்டர் டேங்க் இல் இருந்துதான் குடிநீர் நகர் முழுதும் விநியோகம் செய்யப்பட்டது. இந்த குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நிறைவு பெற்றது. நாளை முதல் குடிநீர் வினியோகம் சீரான முறையில் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.