குமாரபாளையம் நகராட்சியில் மக்கள் நீதி மய்யத்தினர் கோரிக்கை மனு

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2022-05-09 13:00 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் கோரிக்கை மனு நகராட்சி கமிஷனரிடம் கொடுக்கப்பட்டது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- குமாரபாளையம் ஜே.கே.கே. ரோடு, முருகன் இரும்பு கடை பின்புறம் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இந்த பள்ளத்தை சீரமைத்து குப்பைகளை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்.வி.பி. சந்து பகுதியில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. புதிய மின் விளக்கு அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகளிரணி அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் யோகராஜ், வரதராஜ், மனோகரன் பாபு, விமலாவேணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News