தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்த காேரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2022-06-11 12:15 GMT

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி நிர்வாகிகள், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிரணி நிர்வாகிகள், குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- குமாரபாளையம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் தேவையான தூய்மை பணியாளர்கள் இல்லாததால், நகரின் அனைத்து பகுதியிலும் குப்பைகள் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது. இதனால் பல நோய்கள் ஏற்பட காரணமாகின்றது. இதனால் தூய்மை பணியாளர்கள் அதிகப்படுத்தி உடனுக்குடன் குப்பைகள் அகற்ற வேண்டும். நகரின் கோம்பு பள்ளம் முட்புதர்களால் அடைக்கப்பட்டு, கழிவுநீர் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பொக்லின் இயந்திரங்கள் அதிகப்படுத்தி கோம்பு பள்ளம் அடைப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா பங்கேற்றனர்.

Tags:    

Similar News