குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அலுவலகம் திறப்பு

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2022-02-11 15:15 GMT
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அலுவலகம் திறப்பு

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 4 வார்டு பகுதியில் நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் மாவட்ட செயலர் காமராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  • whatsapp icon

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். சின்னப்பநாயக்கன்பாளையம் 4 வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக தமிழரசி போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளை கவனிக்க தேர்தல் அலுவலகம் திறப்பு விழா வேட்பாளர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலர் காமராஜ் பங்கேற்று ரிப்பன் வெட்டி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:- வாக்காளர்களுக்கு பணம் தருவது நமது கட்சி தலைவருக்கு உடன்படாத செயல். நேர்மையான நகராட்சி நிர்வாகம் அமைய வாக்களிக்க வேண்டி, பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். தேர்தல் முடியும் வரை முழு மூச்சாக நமது கட்சியின் கொள்கைகள் கொண்ட துண்டு பிரசுரங்களை வாக்காளர்கள் அனைவருக்கும் கொடுத்து வாக்களிக்க கேட்டு கொண்டால், நாளை நமதாகும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட நற்பணி இயக்க பொருளாளர் நந்தகுமார், நகர மகளிரணி செயலர் சித்ரா, நிர்வாகி உஷா, கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News