குமாரபாளையத்தில் மரம் வெட்டியதற்கு அபராதம்: தாசில்தார் பரிந்துரை

குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் மரம் வெட்டியதற்கு அபராதம் விதிக்க தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.;

Update: 2022-06-13 13:45 GMT

குமாரபாளையத்தில் அனுமதியில்லாமல் மரம் வெட்டியதற்கு அபராதம் விதிக்க தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார்.

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் உள்ள புருஷோத்தம பெருமாள் கோவில் பின்புறம் உள்ள அரசு இடத்தில் நன்கு வளர்ந்த பெரிய மரம் ஒன்றை அப்பகுதியினர் வெட்டினர். இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரணை செய்தனர். இது குறித்து வி.ஏ.ஒ. செந்தில்குமார், ஆர்.ஐ. விஜய் ஆகியோர் தாசில்தார் தமிழரசிக்கு விசாரணை அறிக்கை சமர்பித்தனர். மரம் வெட்டியவர்களுக்கு அபராதம் விதிக்க தாசில்தார் தமிழரசி திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Tags:    

Similar News