பா.ம.க. சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு

குமாரபாளையத்தில் பா.ம.க. சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது;

Update: 2023-05-12 13:45 GMT

குமாரபாளையத்தில் பா.ம.க. சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு விழா முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்

குமாரபாளையத்தில் பா.ம.க. சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. மேலும் பா.மா.க. சார்பில் குமாரபாளையம் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் ஒப்புதலுடன், மாநில தலைவர் அன்புமணி வழிகாட்டுதலில் குமாரபாளையம் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட இளைஞர் அகுமாரபாளையத்தில் பா.ம.க. சார்பில் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது

குமாரபாளையம் பா.ம.க.வில் சில நாட்கள் முன்பு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நகர செயலர் கோவிந்தன் ஏற்பாட்டின் பேரில், கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றுவிழா நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி பங்கேற்று கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். நகரில் அனைத்து வார்டுகளில் மாவட்ட செயலர் சுதாகர் கட்சிக்கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.துணைச் செயலராக கார்த்தி, மாவட்ட துணை செயலர்களாக சுப்ரமணி, சிவராமன், ஒன்றிய செயலர் ஜெகந்நாதன், நகர செயலராக கோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாகிகள் செந்தில், மாதையன், கார்த்தி, மூர்த்தி, சவுந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News