குமாரபாளையம் அரசு கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-01 13:15 GMT

குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கல்லூரி முதல்வர் ரேணுகா பேசினார்.

குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது. இவர் பேசியதாவது:

மாணவ, மாணவியர்களுக்கு தட்டச்சு, கணினி பயிற்சி வகுப்புகள் மூலம் கூடுதல் திறமை வளர்த்துக்கொள்வதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அதிக வேகம் கொண்ட டூவீலர்களை மாணவர்களுக்கு வாங்கி தருவதை தவிர்க்க வேண்டும்.

மாதம் ஒருமுறை மாணவர்கள் நடவடிக்கை குறித்து துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்களிடம் பெற்றோர் நேரில் சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடாது. மாணவியர்கள் யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அச்சம் கொள்ளாமல், ஆபத்தான சூழ்நிலை எனில் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவிக்க தயங்க கூடாது.

இவ்வாறு இவர் பேசினார்.

இதில் துணை தலைவர் ராமகிருஷ்ணன், இணை செயலர் பூங்கொடி, பொருளர் ஈஸ்வரமூர்த்தி, பேராசிரியர்கள் ரகுபதி, கீர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News